உள்நாடு

முன்னாள் கொழும்பு மேயர் முஸம்மிலின் மகன் கைது

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் முதல்வர் ஏ.ஜே.எம். முஸம்மிலின் மூத்த மகன், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் வைத்து மத்திய குற்ற விசாரணைப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டடக் கட்டுமானத் திட்டமொன்றுக்குச் செலுத்த வேண்டியிருந்த சுமார் 36 மில்லியன் ரூபாய் பணத்தை செலுத்தத் தவறியமை தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் தொடர்பாக மத்திய குற்ற விசாரணைப் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *