உள்நாடு

மட்/மம/ ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் சிறுவர் சந்தை நிகழ்வு

காத்தான்குடி மட்/மம ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் “சிறுவர் சந்தை” (Children’s Market) நிகழ்வு, பாடசாலை அதிபர் திருமதி எஸ்.ஏ.எம். றிஸ்வி தலைமையில் இன்று (02) வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டு, சிறுவர் சந்தை நிகழ்வை சிறப்பித்ததுடன், மாணவர்களின் திறமைகளையும் ஆர்வத்தையும் பாராட்டி அவர்களை ஊக்குவித்தார்.

மாணவர்களின் செயற்பாட்டு திறன், வியாபாரப் புரிதல் மற்றும் சமூகத் தொடர்பாடல் திறன்களை வளர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

— ஊடகப்பிரிவு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *