காத்தான்குடி மேயர் மற்றும் குழுவினருக்கு சென்னையில் அமைச்சர் சாஜஹான் தலைமையில் வரவேற்பு
சென்னை பசுமை சாலையில் அரசு இல்லத்திற்கு 13.10.2026 செவ்வாய்க்கிழமை இரவு வருகை தந்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின்
இலங்கை காத்தான்குடி நகரசபை
மேயர் எஸ். எச். எம். அஸ்பர் தலையையில் வந்த குழுவினர் காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள் இ.எம். றுஸ்வின், எம். ஏ. சி. ஹம்தூன் எம். ஐ. என். ஜவாஹிர், மேயர் செயலாளர் எம். ஆசிப், மற்றும் இலங்கை கிழக்கு மகாணம் தொழில் அதிபர்கள் ஏ. ஆர். எம்.றஸிம், எம். எச். எம்.ஹனிப், எம். ஏ. ஏ. அய்மன் ஆகியோரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளரும், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சருமான ஏ. எம். ஷாஜஹான், மாநில துணைத்தலைவரும், தமிழ்நாடு வகஃப் வாரிய தலைவருமான கே. நவாஸ் கனி எம். பி., சிறப்பான வரவேற்பு அளித்தார்.
பின்னர் காத்தான்குடி நகரசபை சார்பில் பல்வேறு பணிகள் குறித்து இருவரும் விரிவாக கேட்டறிந்தார்கள். உடன் தென்காசி மாவட்ட செயலாளர் சையது பட்டாணி, எம். எஸ். எப். மாநில செயலாளர் ஷபீக் அஹமது, தேசிய எம். எஸ். எப். துணைத்தலைவர் புளியங்குடி அல் ஆமீன், மக்கா ஹஜ் சர்வீஸ் அன்சாரி, மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது ஆகியோர் உடன் இருந்தார்கள்.

(படங்கள் : திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது)
