மருத்துவ இறுதித் தேர்வில் First Class; நான்கு துறைகளில் Distinction பெற்று சாதனை படைத்து சாலம்பைக்குளத்திற்கு பெருமை தேடிக் கொடுத்தார் ஸாஜித் ஸாஹிப்
வவுனியா சாளம்பைக்குளத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஐதுரூஸ் ஸாஹிப் – பாத்திமா பரீஸா தம்பதியினரின் புதல்வரான வைத்தியர் ஸாஜித் ஸாஹிப், மருத்துவ இறுதித் தேர்வில் First Class சித்தியைப் பெற்று, நான்கு முக்கிய மருத்துவத் துறைகளிலும் Distinction பெற்று சாதனை படைத்துள்ளார்.
மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் (Obstetrics & Gynaecology), குழந்தை மருத்துவம் (Paediatrics), அறுவை சிகிச்சை (Surgery), மனநல மருத்துவம் (Psychiatry) ஆகிய நான்கு துறைகளிலும் Distinction பெற்று அவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார்.
தற்போது அளுத்கம, சீனாவத்தயில் வசித்துவரும் இவரது குடும்பம், சாளம்பைக்குளத்தைப் பூர்வீகமாகக் கொண்டது என்பது இச்சாதனைக்கு மேலும் சிறப்புச் சேர்க்கின்றது.
மருத்துவக் கல்வியில் இத்தகைய சிறப்பான பெறுபேற்றைப் பெறுவதற்கு அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு அவசியமாகும். வைத்தியர் ஸாஜித் சாஹிபின் இந்தச் சாதனை, அவரது பெற்றோருக்கும் சாளம்பைக்குள மண்ணுக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.
(சப்ரான் பதுர்தீன்)
