புத்தளம் ரெக்லா விளையாட்டு கழகத்தின் பாரம்பரிய மாட்டு வண்டில் போட்டிகள்
புத்தளம் ரெக்லா விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்த புத்தளம் நகரின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளான மாட்டு வண்டில் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் வெள்ளிக்கிழமை (28) மாலை புத்தளம் இஜ்திமா மைதானத்தில் இடம்பெற்றது.
புத்தளம் ரெக்லா விளையாட்டு கழகமானது, புத்தளம் நகரின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை விட்டுக் கொடுக்காமல் வருடத்திற்கு மூன்று தடவைகள் இத்தகைய போட்டிகளை நடாத்தி வருகின்றது.
கரத்தைகளின் உரிமையாளர்கள், மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் குதிரைகளின் உரிமையாளர்களைக் கொண்ட ஓர் இளம் துடிப்பு மிக்க அமைப்பாக இந்த ரெக்லா விளையாட்டுக்கழகம் கடந்த ஆறு வருடங்களாக புத்தளம் நகரில் தொடர்ந்து இயங்கி வருகின்றது.
நடைபெற்ற இந்த பாரம்பரியமான போட்டியில், மாட்டு வண்டில் அரை கரத்தை ஓட்டம், ரேஸ் கரத்தை ஓட்டம், டயர் கரத்தை ஓட்டம், குதிரை ஓட்டம், திறந்த போட்டிகள், நிர்வாக குழுவினர்களுக்கான போட்டிகள் என்பன நடந்தேறின.
போட்டிகளின் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் கலந்து கொண்டார்.
மாநகர சபை உறுப்பினர்களான இப்லால் அமீன், சஹ்ரான் தாஜுதீன், ரனீஸ் பதூர்தீன், ஏ.ஓ.அலிகான், இஷாம் மரைக்கார், முன்னாள் உறுப்பினர் பர்வீன் ராஜா, தொழில் அதிபர் அப்துல் ரகுமான், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக்கிளை தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் அல் மிஸ்பாஹி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
ரேஸ் கரத்தை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை வாரிஸ், அஸ்வர்கான், இஷ்மி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அரை கரத்தை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை சம்பத், அமித, வாரிஸ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
டயர் கரத்தை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை அஸ்வர்கான், இஷ்மி, நிஷால் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
ரேஸ் கரத்தை திறந்த போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை இஷ்மி, பிரசன்ன, பசால் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
நிர்வாக குழுவினர்களுக்கான ரேஸ் கரத்தை போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை வசீம், ரியாஸ், நஷான் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
குதிரை பந்தயம் போட்டியில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை சஹ்னிஸ், அசாம், நாசிக் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
போட்டிகளுக்கு நடுவர்களாக ரமீஸ், சல்மான், வஸீம் ஆகியோர் கடமையாற்றினார்.
போட்டிகளை திறம்பட நடாத்தி முடித்த ரெக்லா விளையாட்டு கழக நிர்வாகிகளான தலைவர் – நிம்சாஸ், உப தலைவர் – நாசிக்,
செயலாளர் – அசீன், உப செயலாளர் – ரியாஸ்,
பொருளாளர் – அஷ்ரப்தீன்,
உப பொருளாளர் – வசீம் மற்றும்
நிர்வாக அங்கத்தவர்களான
சாஹுல், பர்சாத், ரிஸ்வான், அப்துல்லா, சல்மான், காமில் ஆகியோர் சிறப்பாக நடாத்தியிருந்தனர்.

















எம்.யூ.எம்.சனூன்
