உள்நாடு

அஷ்ஷெய்க் அப்துல் நாஸிரின் நபி புகழ் நூல் வெளியீட்டு விழா புதனன்று கொழும்பில்.

சிந்தனையாளர், ஆன்மீகவாதி, இலக்கியவாதி, கவிஞர், எழுத்தாளர், வளவாளர் மற்றும் பன்னூல் ஆசிரியர் எனப் பன்முக ஆளுமை கொண்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் முன்னாள் பொதுச் செயலாளர் அல்-உஸ்தாத் அஷ்-ஷைக் எஸ்.அப்துல் நாஸிர் ஹழ்ரத் அவர்களின் அர்-ரபீ (B) எனும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் புகழ் கவிதை நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இலங்கை தேசிய சமாதான பேரவையின் பணிப்பாளரும், மீடியா லிங்கின் தவிசாளருமான அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். நியாஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறவிருக்கின்ற இந்நிகழ்வானது எதிர்வரும் 2026.10.21 புதன்கிழமை, மாலை 03:45 மணிமுதல் 06:00 மணிவரை தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

2ஆம் மாடி, 310, டி.ஆர். விஜயவர்தன மாவத்தை, கொழும்பு 10

மேலும் ஓய்வு பெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி கௌரவ அல்-ஹாஜ் அஹ்ஸன் மரிக்கார், LLM (Col) அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன் கௌரவ அதிதிகளாக, கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்- ஷைக் அல்-ஹாஜ் ஐ.எம். தாலிப் அவர்கள் நூலாசிரியர் பற்றிய அறிமுக உரையை நிகழ்த்த உள்ளார். மற்றும் மதீனத் அல் இல்ம் கல்லூரியின் ஆசிரியரும், கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு தலைவருமான அறிஞர், கவிஞர் அஷ்-ஷைக் எம்.பி(பி).எம். ஹிஷாம் (பத்தாஹி) அவர்கள் நூல் பற்றிய ஓர் ஆய்வு உரையை நிகழ்த்த உள்ளார்.

(பேருவலை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *