உள்நாடு

ஓட்டமாவடியில் “முழுமதியில் ஒரு கலைக்கூடல்” – ஹிஸ்புல்லாஹ் எம்பி, எம்.எஸ்.எஸ்.அமீர் அலி பங்கேற்பு

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் “முழுமதியில் ஒரு கலைக்கூடல்” தொடரின் 12ஆவது நிகழ்வு பிரதேச செயலாளர் ஏ.தாஹிரின் தலைமையில் ஓட்டமாவடி ரிவர் பார்க்கில் (28) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலக கலாசார பேரவையின் ஏற்பாட்டில் சிறிலங்கா மீடியா போரத்தின் அனுசரணையில் இடம்பெற்றது.

ஓய்வுபெற்ற அதிபரும் கவிஞருமான யூ.அஹமட் அவர்களை சிறப்பித்து இடம்பெற்ற இம்மாதத்திற்கான “முழுமதியில் ஒரு கலைக்கூடல்” நிகழ்வில் மாணவர்கள் மற்றும் கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் பிரதேச முக்கியஸ்தர்களால் யூ.அஹமட் தொடர்பாக பேச்சுக்களும் கவிதைகளும் இடம்பெற்றன.

இதன் போது ஓட்டமாவடி பழைய பாலத்தினை பிரதிபலிக்கும் வகையிலான படத்தினை பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்துவதற்காக
சிறிலங்கா மீடியா போரத்தினால் அதன் பணிப்பாளர் எம்.ரீ.எம்.பாரிசினால் பிரதேச செயலாளர் ஏ.தாஹிரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோர் 12ஆவது அமர்வில் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்

ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஏ.எம்.ஏ.காதர், ஓய்வுநிலை அதிபர்களான ஏ.எல்.நெய்னா முகம்மத், எச்.எம்.எம்.இஸ்மாயில் (வாழை மயில்) ஓட்டமாவடி இளைஞர் பயிற்சி நிலையப்பொறுப்பதிகாரி ஏ.எம்.ஹனீபா, கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர்முஹம்மத் காஸிமி, சமுக சேவை உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் ஏ.நஜீம், மொழிபெயர்ப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.முஸ்தபா, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஈ.எல்.மஹ்றூப் (றியோ மஹ்றூப்) ஓய்வு பெற்ற ஆசிரியர் ஐ.எல்.ஜமால்தீன், சிறிலங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ், ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.முர்ஷித், கலையருவி பணிப்பாளர் ஏ‌.சி.எம்.ருமைஸ், தமிழ் சத்தம் பணிப்பாளர் அமீன், ஆசிரியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *