அக்குரனயில் 10 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி பாரிய விபத்து
அக்குரனவின் 7வது கனுவ – குருகொட சந்திப்புப் பகுதியில் சுமார் 10 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் விபத்து ஏற்பட்டுள்ளதாக அலவத்துகொட பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை (19) நடந்த இந்த விபத்தில் காயமடைந்த பலர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
