BMICH இல் RICH Curly Academy இன் மாபெரும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் RiCH Curly Academy ஏற்பாடு செய்திருந்த Grand Graduation Ceremony 2026 நிகழ்வு லெவன்டர் அரங்கத்தில் (01.08.2026) வெகுசிறப்பாக நடைபெற்றது.
RiCH Curly Academy நிறுவனரும் பணிப்பாளருமான திருமதி ரிஸ்னா அஸ்லம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் மற்றும் அவரது பாரியார் திருமதி மரியம் ஹாஷிம் உமர் ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
Hassim Omar & Hassim Omar – ஹாசிம் உமர்
நிகழ்வுக்கு வருகை தந்த பிரதம அதிதிகள் பாரம்பரிய நடனமான கண்டிய நடனத்துடன் அழைத்து வரப்பட்டு மலர் கொத்து வழங்கி வரவேற்கப்பட்டனர்
வரவேற்புரையோடு நிகழ்வு ஆரம்பமானது.
இந்நிகழ்வின் போது ஹென்னா வடிவமைப்பு, கேக் தயாரித்தல் மற்றும் அலங்காரம், மிக்ஸாலஜி உள்ளிட்ட துறைகளில் பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை நிகழ்வின் பிரதம விருந்தினர்களான ஹாஷிம் உமர் பவுண்டேஷனின் ஸ்தாபகர் புரவலர் ஹாசிம் உமர் மற்றும் அவரது பாரியார் மரியம் ஹாஷிம் உமர் ஆகியோர் வழங்கி வைத்தனர்.
அதேபோன்று பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களால் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்
கல்வி, தொழில் முனைவு, அழகுக்கலை மற்றும் சமூக சேவைத் துறைகளில் பங்களிப்பு வழங்கி வரும் சிறப்பு அதிதிகள் மற்றும் ஊடகப் பங்காளர்களுக்கும் நினைவுச் சின்னங்கள் மற்றும் பாராட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களாக Liya craft நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.பி.எம் லுஃப்னாஸ், AR Clothing நிறுவனத்தின் உரிமையாளர் பாத்திமா ஃபஸ்னா, Fazmina Bridal & Academy நிறுவனத்தின் உரிமையாளர் பாத்திமா ஃபஸ்மினா ரிஸான், பாத்திமா ஷாரா பரீட் (Sha Collection), உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்றனர்
இந்நிகழ்வில் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




(அஷ்ரப் ஏ சமத்)
