இஸ்லாமிய கலாசாரப் போட்டிகளில் மூன்று முதலிடங்களை வென்று புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மகத்தான சாதனை
இஸ்லாமிய கலாசாரப் போட்டிகளின் மாகாண மட்டப் போட்டிகளில் புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, மூன்று முதலிடங்கள் உட்பட ஐந்து வெற்றிகளைப் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
போட்டி முடிவுகளின் பிரகாரம் சீனடிக்கலை முதலாம் இடம்,
ஈத் தக்பீர் முதலாம் இடம்,
சமூக நாடகம் முதலாம் இடம்,
மஸ்அலா இரண்டாம் இடம்,
மர்ஹபா பைத் மூன்றாம் இடம் ஆகியன பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வெற்றிகள் மாணவர்களின் திறமை, விடாமுயற்சி, ஒழுக்கம், குழு ஒற்றுமை மற்றும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்புமிக்க வழிகாட்டல் ஆகியவற்றுக்குக் கிடைத்த சிறந்த அங்கீகாரமாகும்.
இம்மகத்தான சாதனைக்குப் பின்னால் உறுதுணையாக நின்ற கல்லூரி அதிபர் ஐ.ஏ.நஜீம், Iஇணைப்பாடவிதானச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான அதிபர் எம்.நளீம், போட்டிகளுக்காக மாணவர்களை அர்ப்பணிப்புடன் பயிற்றுவித்த ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பு வழங்கிய நலன்விரும்பிகள், பெற்றோர்கள் அனைவருக்கும் கல்லூரியின் சார்பாக, கல்லூரியின் முகாமைத்துவ குழுவினர் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றனர்.
கல்லூரியின் புகழை மாகாண மட்டத்தில் உயர்த்திய மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் உளங்கனிந்த வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாகாண மட்டத்தில் சாதனை படைத்த மாணவர்கள், தேசிய மட்டப் போட்டிகளிலும் தமது திறமைகளை வெளிப்படுத்தி மேலும் பல வெற்றிகளைக் குவித்து, புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரியின் புகழை தேசிய அளவில் உயர்த்துவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.



(எம்.யூ.எம்.சனூன்)
