புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தை (PUJA) சந்தித்த முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் பைரூஸ் கௌரவிப்பு
சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம். பீ. எம். பைரூஸ் புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அங்கத்தவர்களை புத்தளம் ஐ சொப்ட் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை சந்தித்து விஷேட கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டார்.
புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எம். யூ. எம். சனூன் தலைமையில் இடம்பெற்ற இச் சந்திப்பில் ஒன்றியத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்களான ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் இஸட். ஏ. சன்ஹீர் மற்றும் கவிஞர் மரைக்கார் ஆகியோருடன் புத்தளம் பிரதேச ஊடகவியலாளர் பலரும் கலந்து கொண்டனர்
இவ் விஷேட கலந்துரையாடலின் போது புத்தளத்தில் ஊடகவியலாளர்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சனைகள் முன்வைக்கப்பட்டது இதில் சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஊடாக தீர்வுகளை பெற்று தர முடியுமான பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருவதாகவும் அத்தோடு ஊடகத்துறையின் புதிய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் மூத்த ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை எதிர்கொள்ளவதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டதுடன் மேலும் புத்தளததில் ஊடகத்துறையில் ஆர்வம் உள்ள இளைஞசர்களை இனங் கண்டு அவர்களுக்கான புதிய தகவல் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி இளம் ஊடகவியலாளர்களை உருவாக்குவதற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ள பட வேண்டியதன் அவசியமும் கலந்துரையாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் சிறி லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான எம். பீ. எம். பைரூஸை கௌரவிக்கும் முகமாக புத்தளம் ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதும் விஷேட அம்சமாகும்.







(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
