சாய்ந்தமருது அல்-ஜலாலில் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வும் வீதி நாடகமும்
சர்வதேச ரீதியில் ஜூன் 12 இல் “சிறுவர்களுக்கு நியாயமான விளையாட்டு பெரியவர்களுக்கு கண்னியமான வேலை” மற்றும் “சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்க ஒன்று சேருவோம்” எனும் தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படும் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்தின் விழிப்புணர்வு மற்றும் வீதி நாடகம் என்பன சாய்ந்தமருது பிரதேச செயலகத்துடன் இணைந்து சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் இணைப்பாடவிதானப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டு இன்று (12) நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில், சிறுவர் தொழிலாளர்களை இல்லாதொழிக்க ஒன்று சேருவோம் எனும் தொனிப்பொருளுக்கு அமைய பாடசாலையின் ஆங்கிலப் பாட ஆசிரியை திருமதி. சிராபா தமீம் அவர்களின் இயக்கத்தில் உருவான வீதிநாடகமும் அதனுடன் இணைந்த விழிப்புணர்வு ஊர்வலமும் சாய்ந்தமருது கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றதுடன் இதன்போது சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான தினத்திற்கான துண்டுப் பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. அரங்கேற்றப்பட்ட நாடகத்தில் ஆர்.எம். றிமாஸ், ஜே.எம். ஜினாஸ், கே.ஆர். மாரிப், எம்.பி.எம். அதீப், எம்.என்.எம். நப்கான், ஏ.டபிள்யூ.எம். தஸ்ரிப், எச்.எம். அப்துல்லாஹ் ஆகியோர் கதாப்பாத்திரம் ஏற்று நடாத்தியிருந்ததுடன், எம்.ஆர்.யூ. அப்துல்லாஹ், ஏ.எம். அஸ்ரி, எம்.எப். இபாதா ஆகியோர் முறையே ஆங்கிலம், தமிழ் மற்றும் சிங்கள விழிப்புணர்வு வசனங்களை மொழிந்தனர்.
பாடசாலை அதிபர் எம். எம். ஹிர்வஹான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சாய்ந்தமருது உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. எம்.ஐ. முஃவாபிகா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அஸ்மா மலீக் அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன்,
விசேட அதிதியாக பொலிஸ் பரிசோதகர் எஸ்.ஐ. பிரகலாதன் அவர்களும் கலந்து கொண்டனர்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வ. குகராஜ் அவர்கள் பிரதேச செயலகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பு செய்ததுடன் பாடசாலை சார்பில் வழிகாட்டல் ஆலோசனைக்கு பொறுப்பான ஆசிரியர் யூ.கே.எம். முபாறக் அவர்கள் ஒருங்கிணைப்பு செய்து நடாத்திய இந்நிகழ்வில், நாடகத்தில் பங்கு பற்றிய மாணவர்களுக்கான மற்றும் வழிநடாத்திய அதிபர், ஆசிரியர்களுக்கான பரிசில்கள் சாய்ந்தமருது பிரதேச சமூக ஆர்வலர் திருமதி. எம்.ஐ. பாரிசா அவர்களின் அனுசரணையில் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வின் ஒரு கட்டமாக தொழில் திணைக்கள உத்தியோகத்தர் எஸ்.கணேசமூர்த்தி அவர்களால் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் தொழில் சட்ட ஏற்பாடுகள் தொடர்பான செயலமர்வும் இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வுகளில் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் யூ.எல். அசாருடீன், நிருவாகத்துக்கான பிரதி அதிபர் எம்.எஸ். நபார், கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதி அதிபர் எம்.ஏ.எம். சிராஜ், உதவி அதிபர் ஏ.எம். பாஹிம், இணைப்பாடவிதானத்துக்கு பொறுப்பான உதவி அதிபர் எம்.பி.எம். பௌசான் மற்றும் சாய்ந்தமருது 04 ற்கான கிராம உத்தியோகத்தர் , சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. எச்.எம்.எப். ருமேஸா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. ஏ.எல். முஸ்பிரா, முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர்களான வை.திருப்பதி, என்.எம். சிபானஸ் ரீன் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உத்தியோகத்தர்களான, ஏ.எல். அபிரா, எம்.ஆர்.எஸ். நசானா நன்னடத்தை அபிவிருத்தி உத்தியோகத்தர் கிசோர் ஆகியோரும் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான பாறுக் மற்றும் திருமதி. சந்தமாலி, பாடசாலையின் பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.










(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
