‘தினச் சுடர்’தேசிய விருது விழா:- முதற்கட்டமாக 20 ஆளுமைகளுக்குதேசிய விருதுகள்

‘தினச்சுடர்’ பத்திரிகையின்
தேசிய விருது வழங்கும் நிகழ்வு, உலமாக் கட்சித் தலைவர் அஷ்ஷெய்க் முபாறக் அப்துல் மஜீத் தலைமையில், கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஹாஷிம் உமர் பௌண்டேஷன் தலைமையகத்தில்,
கடந்த 2 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று வெகு சிறப்புற நடந்தேறியது.
இதன்போது, ஊடகத்துறை மற்றும் கலைத்துறை ஆகியவற்றில் பங்களிப்புச் செய்யும் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளைச் சேர்ந்த 20 ஆண் பெண் ஆளுமைகள், ‘தினச்சுடர்’ தேசிய விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
நிகழ்வில் பிரதம அதிதியாக, ஹாஷிம் உமர் பௌண்டேஷன் ஸ்தாபகர் புரவலர் ஹாஷிம் உமர் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
‘தமிழன்’ பத்திரிகை இணை ஆசிரியர் ஏ.எம். ஜௌபர், பௌண்டேஷன் பணிப்பாளர் மரியம், ‘சுயாதீன தொலைக்காட்சி’ தமிழ்ச் செய்திப் பிரிவு முன்னாள் செய்தி முகாமையாளர் சித்தீக் ஹனீபா, ‘இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை’ முன்னாள் மேலதிக பணிப்பாளர் எம்.இஸட். அஹமட் முனவ்வர், சிரேஷ்ட ஊடகவியலாளர் ராதா மேதா, பௌண்டேஷன் ஒருங்கிணைப்பாளர்களான ஆகிப் மொஹமட், இஸ்ஸத் மற்றும் ஊடகவியலாளர்கள், கலைஞர்கள்
உள்ளிட்ட ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.













(அஸ்ரப் ஸமத், ஐ.ஏ.காதிர்கான்)
