உள்நாடு

கட்டார் ஷரிடி நிதியுதவியில் களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வு கூடம்

முன்னாள் வெளிவிகார நிதி மற்றும் நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.யு.எம். அலி சப்ரி அவர்களுடைய வேண்டுகோளின் பேரில் கட்டார் ஷரிடி நிதியத்தின் மூலமாக களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு வழங்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூட திறப்பு விழா (04) இன்று கல்லூரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக மேல் மாகாண ஆளுநர் ஹனிப் யூசுப் கலந்து சிறப்பித்தார்.

கட்டார் தூதுவராலய பிரதிநிதிகள் கட்டார் ஷரிடி நிதியப் பணிப்பாளர் உட்பட அரசியல் பிரமுகர்கள் முக்கிய அதிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது 80 மில்லியன் பெறுமதியான அங்க சம்பூரண விஞ்ஞான ஆய்வு கூடத்தை அதிதிகள் பார்வையிட்டனர். அத்தோடு, முன்னாள் அமைச்சர் அலி சப்ரியின் வேண்டுகோளின் பேரில் களுத்துறை முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்திற்கு மேல் மாகாண ஆளுநர் விஜயம் செய்து பாடசாலையுடைய குறை நிறைகளை ஆராய்ந்ததோடு, அரைவாசி பூரணப்படுத்தப்பட்டு இருக்கின்ற கட்டட தொகுதியை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆளுநருடைய சொந்த முயற்சியில் இரு பாடசாலைகளுக்கும் இலக்காகக் கொண்டு பல்வேறு அபிவிருத்தி முன்னெடுப்புகளும் மேற்கொள்வதற்கான இணக்கப்பாட்டை மேல் மாகாண ஆளுநர் அவர்கள் வழங்கினார்.

இதன் போது ஆளுநர் அவர்களுக்கு களுத்துறை முஸ்லிம் பாலிகா மகா வித்யாலய பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுச் சங்க செயலாளர் ஹிஷாம் சுஹைலினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில் பெரும் திரளான மக்கள் கலந்து சிறப்பித்ததோடு, களுத்துறை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நன்நாள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

(பி.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *