வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம்!

தொடர்ந்து நாட்டில் பெய்து கொண்டிருக்கும் பெருமழையின் காரணமாக, நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கேற்பட்டிருப்பதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதனால், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிராந்தியக் கிளைகளும், மஸ்ஜித் நிர்வாகிகளும் இணைந்து தமது பகுதிகளில் பாதிக்கப்பட்டோருக்கு முடிந்த உதவிகளைச் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும், இதற்கு பொதுமக்கள், நலன் விரும்பிகள், தனவந்தர்கள் தம்மால் இயன்ற உதவி, ஒத்தாசைகளைச் செய்யுமாறும், அத்துடன் அவ்வப் பிரதேச கிராம உத்தியோகத்தர்களிடம் தனிப்பட்ட ரீதியில் பாதிப்பின் விபரங்களை பதிந்து பிரதேச செயலகங்களின் சமூக சேவைப் பிரிவிலும், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகளிடமும் பதிவுகளை மேற்கொள்ள வழிகாட்டுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் சமூக சேவைக்குழு அன்புடன் வேண்டிக் கொள்கின்றது.
பாதிப்படைந்தவர்கள் இயல்பு நிலைக்கு மிக விரைவில் திரும்ப அல்லாஹ்வைப் பிரார்த்திப்பதுடன், மழை தேவையை விட அதிகரித்தால் ஓதும் பின்வரும் துஆவை அதிகமாக ஓதிக்கொள்ளுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் கேட்டுக்கொள்கிறது.
اللهُمَّ حَوالينَا وَلَا عَلَيْنَا، اللهُمَّ عَلَى الْآكَامِ، وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ – (صحيح مسلم -897)
– சமூக சேவைப் பிரிவு – ACJU –
