உள்நாடு

இன்றிரவு வரை அவதானமாக இருக்கவும்..!

பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

இந்த அறிவித்தல் இன்று (15) முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், அது இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும். 

இதற்கமைய, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களுடன் அம்பாறை, மட்டக்களப்பு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் மின்னல் விபத்துகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பிரதேசங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால், மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படும் விபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *