உள்நாடு

அல் குர்ஆனை மனனம் செய்து ஹாபிஸாகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள்.

தெஹியங்க ரவாஹிய அரபுக் கல்லூரியின் ஹிப்ழ் பிரிவில் புனித அல்குர்ஆனை மனனம் செய்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களும் அல்குர்ஆனை முழுமையாக மனனம் செய்து ஒரே தினத்தில் நிறைவு செய்துள்ளனர்

இம்மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை தெஹியங்க ஜும்ஆ மஸ்ஜிதின் ஜும்ஆ தொழுகை தொடர்ந்து மேற்படி அரபுக் கல்லூரியின் அதிபர் அஷ்ஷேக் மெளலவி ஹிதாயதுல்லா ரஸின் தலைமையில் நடைபெற்றது தெஹியங்க ஜம்மியத்துல் உலமா சபை தெஹியங்க பைத்துல் மால் அமைப்பு மேற்படி நிர்வாக சபையினர் அரபுக் கல்லூரியின் பழைய மாணவர்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர் இதன் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குர்ஆனை மனனம் செய்த ஹபிழ்காளான நாந்தான்டி கொட்றமுள்ள பகுதியை சேர்ந்த ஆர்.லுதுபி வயது 16 ஆர்.சாத் வயது14 ஆர்.அப்துல்லா வயது 12 ஆகிய மூன்று சகோதரர்களைபாராட்டி பெறுமதியான பரில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன அதே சமயம் இம்மாணவர்களின் தந்தையான அஷ்ஷேக் முஹம்மத் ரிஸ்வான் என்பவருக்கு உம்ரா பயணத்துக்கு மக்கா செல்வதற்கான இலவச விமான டிக்கடும் தெஹியங்க எயிட்(AID) நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.

மாத்தளை எம்.சதூர்தீன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *