உள்நாடு

மு.கா.எம்.பீ.அப்துல் வாஸித் இராஜினாமா


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாஸித் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். 

இந்த ராஜினாமா இன்றைய தினம் (14) முதல் அமுலுக்கு வருவதாக பாராளுமன்றத்தின் பதில் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். 

இதன்படி, பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினர் பதவியொன்றில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளதாக 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(5) ஆம் பிரிவுக்கு அமைவாகத் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *