புத்தளத்தில் வைத்திய அத்தியட்சகருக்கு வரவேற்பும், பிரியாவிடையும்
புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்ட வைத்தியர் லசித்த மழலசேகர அவர்களை வரவேற்கும் நிகழ்வும், கடந்த ஒரு வருடமாக பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றிய வைத்தியர் லசந்த லியனகே அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் நேற்று (01) புத்தளத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர சபை மேயர் ரின்சாத் அஹமத், பிரதி மேயர் எம்.என்.எம். நுஸ்கி மற்றும் சர்வமதத் தலைவர்கள், உலமாக்கள், வைத்தியர்கள், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், பள்ளிவாயல் நிர்வாகிகள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட உரைகள் இடம்பெற்றதுடன், புதிய வைத்திய அத்தியட்சகர் மற்றும் பிரியாவிடை பெறும் வைத்தியருக்கு புத்தளம் மக்கள் சார்பில் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.









( ஏ.என்.எம் முஸ்பிக்)
