நிககொள்ள மின்ஹாஜில் ஊடகப் பிரிவு அங்குரார்ப்பணம்
மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட நிககொள்ள மின் ஹாஜ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் படைப்பாற்றல் தொடர்பாடல் திறன் மற்றும் ஊடக அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஊடகப் பிரிவு ஒன்று நேற்று முன் தினம் பாடசாலையில் அங்குரார் பணம் செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலங்கை ஒளிப்பரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் கலாபூஷணம் அஹமத் முனவ்வர் ஊடக பிரிவை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்திருந்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையின் தயாரிப்பாளரும், அறிவிப்பாளருமான எ.எம்.ரலீம் , கண்டி கல்வி திணைக்கள சிரேஷ்ட ஆலோசகரும், ஊடகவியலாளரும் கவிஞருமான ரஷீத் எம். ரியால் ,பாடசாலை அதிபர் எஸ்.பாசில், சர்வதேச மனித உரிமைகள் உலகளா பணியின் ஊடக இணைப்பாளரும், ஊடகவியலாளருமான எம்.சதூர்தீன் , கந்துரட முஸ்லிம் சேவை முன்னாள் அறிவிப்பாளர் டி.ரினோஸ், நிககொள்ள ஜும்ஆ பள்ளிவாயல் உப தலைவர் நிலாம் (J.P), அதன் செயலாளர் உசைன், ஊடகவியலாளர் உக்குவளை ஜலீல், சாஜித் ஆகியோர் வீட்டிருப்பதை படங்களில் காணலாம்.


(மாத்தளை எம்.சதூர்தீன்)
