சிலோன் மீடியா போரத்தினால் காத்தான்குடி நகரபிதாவுக்கு கெளரவம்
சிலோன் மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுற்றுப் பயணமொன்றின் போது காத்தான்குடி நகர சபை செயற்பாடுகளை அவதானிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போது சிலோன் மீடியா போரத்தின் அபிமானிகளால் காத்தான்குடி நகர பிதா எஸ்.எச். அஸ்பர் பொண்ணாடை போற்றி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
இந் நிகழ்வில், லங்கா ரேட் சென்றர் முகாமைத்துவ பணிப்பாளர் ஹைருல் அமான், நிதா உர் பிர் அரபுக் கலாசாலையின் பணிப்பாளர் இஸட் எம். அமீன், சமாதான ஊடக அமைப்பின் தலைவர் எம்.எம். ஜெஸ்மின் ஆகியோர் பங்கேற்று குறித்த கௌரவத்தினை வழங்கினர்.
