உள்நாடு

அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரியில் இடமாற்றப்பட்ட பெண் சிற்றூழியர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு

​கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஆடை விவகாரம் தொடர்பாகச் சர்ச்சைகளை எதிர்கொண்டு, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்குத் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்ட முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு சக ஊழியர்கள் வரவேற்பளித்துள்ளனர்.

​குறித்த வைத்தியசாலைக்கு இன்று (19) கடமைக்காக வருகை தந்த 9 பெண் ஊழியர்களையும், அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் ஊழியர்கள் மாலைகள் அணிவித்து அன்புடன் வரவேற்றுள்ளனர். இது தொடர்பான நெகிழ்ச்சியான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *