உள்நாடு

நிககொள்ள மின்ஹாஜில் எதிர்வரும் 28இல் ஊடகப் பிரிவு அங்குரார்ப்பணம்

மாத்தளை கல்வி வலயத்திற்குட்பட்ட நிககொள்ள மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் மாணவர்களின் படைப்பாற்றல், தொடர்பாடல் திறன் மற்றும் ஊடக அறிவை மேம்படுத்தும் நோக்கில் ஊடகப் பிரிவு ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு பாடசாலையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.

பாடசாலை அதிபர் எஸ் . பாசில் தலைமையில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் இலங்கை ஒளிப்பரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர் அஹமத் முனவ்வர் பிரதம அதிதியாகவும், கவிஞர் ரஷீத் எம். ரியால் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தயாரிப்பாளரும், அறிவிப்பாளருமான எ.எம்.ரலீம் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்து கொள்ள உள்ளனர்.

மாணவர்களுக்கிடையே ஊடகத்துறை தொடர்பான ஆர்வத்தை வளர்த்தல் செய்தி சேகரிப்பு அறிவிப்பு நிகழ்ச்சி தயாரிப்பு புகைப்படம் மற்றும் காணொளி தயாரிப்பு போன்ற துறைகளில் நடைமுறை அனுபவத்தை மாணவர்களுக்கு இதன்போது தெளிவூட்டப்படுத்தப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது இதற்கான ஏற்பாடுகளை பாடசாலை நிர்வாகம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பாடசாலை பழைய மாணவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

(மாத்தளை எம். சதூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *