கட்டுரை

சிரேஷ்ட புலனாய்வு ஊடகவியலாளர் எம்.ஐ. முபாரக் எழுதும் 30 வருட முடிவுறாத போர்களம் நீண்ட தொடர்

போர்க்களம் – நெடுந்தொடர்

போர்க்களம்…!!!

வெறும் ஆடு களமல்ல. மரணத்தின் களம். மரணத்தை ஏற்படுத்தும் களம்.

மூன்று தசாப்த காலமாக இந்நாட்டை அழித்த அந்தப் போர் எவ்வளவு பயங்கரமானது என்பதை சொல்லப்போகும் களம் .

இவற்றையெல்லாம் மனிதன்தானா நிகழ்த்தினான் என்று வியக்கும் அளவுக்கு பயங்கரமானது.

பிரமிப்பூட்டும் புலனாய்வுகள். மெய்சிலிர்க்கும் சண்டைகள். நினைத்துப் பார்க்க முடியா ஊடுருவல்கள்.

இந்த நாட்டுக்காக இராணுவம் செய்த தியாகமும் சரி…

தனி நாடு கேட்டு பு லிகள் செய்த தியாகமும் சரி…

ஒரு தனி மனிதனால் சாத்தியமே இல்லை.

இருந்தும், சாத்தியப்படுத்தினார்கள்.

பட்டினியால் இறந்தார்கள்.

தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் பட்டினி கிடந்து பிழைத்தார்கள்.

ஹெலியில் தொங்கி கடலில் வீழ்ந்து மடிந்தார்கள்.

விமானத்தோடு கடலில் வீழ்ந்து இறந்தார்கள்.

படகோடு மூழ்கினார்கள். உடலையே கண்டுபிடிக்க முடியாதவாறு வெடித்துச் சிதறினார்கள்.

சுட்டு வீழ்த்தப்பட்டன விமானங்கள். வெடித்துச் சிதறின நடு வானில்.

தலைகீழாய் வீழ்ந்தன. பனை மரங்களில் முட்டி – மோதி -பல்டி அடித்து…

நடுக்கடலில் நீரில் பட்டும் படாமலும் பறந்தன.

அவ்வளவு ஏன் – தரையிலும் பறந்தன. நம்புவீர்களா…???

படகுகள் மூழ்கடிக்கப்பட்டன. முகாம்கள் அழிக்கப்பட்டன.

முல்லைத்தீவு – கிளிநொச்சி -ஆனையிறவு – பரந்தன் – பூநகரி.

இப்படி எத்தனையோ முகாம்கள் – எத்தனையோ உயிர்கள் .

உண்ண உணவில்லை…!!!

பச்சை மீன்களை உண்டார்கள் – ஆமைகளை திண்டார்கள் – கிடைத்ததையெல்லாம் புசித்தார்கள்.

பருக நீரில்லை. தனது சிறுநீரையே பருகினார்கள். வேறு வழியில்லை.

முடியுமா… எம்மால் முடியுமா …மனசு வருமா…

இல்லை…!!!

ஆனால்,செய்தார்கள். துணிந்து செய்தார்கள். நாட்டுக்காகச் செய்தார்கள்.

பயம் துளியுமில்லை. உயிரைப்பற்றிக் கணக்கே இல்லை.

உயிரை விடவும் நாடே முக்கியம் இந்தப் பக்கம்.

உயிரை விடவும் தமிழீழமே முக்கியம் அந்தப் பக்கம்.

மோதினார்கள் – முட்டி மோதினார்கள் – மூன்று தசாப்த காலமாக மோதினார்கள்.

ஏகப்பட்ட சேதம்…!!!

உயிர்ச் சேதம் – பொருள் சேதம் – ஊனம் .

நாட்டுக்குச் சேதம் – மக்களுக்குச் சேதம் .

எல்லாமே அழிவு – பேரழிவு.

இப்படிப்பட்ட ஒரு யுகத்தை நாம் கடந்து வந்துள்ளோம்.இப்போது நிம்மதியாக வாழ்கிறோம்.

நாம் ஒவ்வொருவரும் இதை அறிந்து வைத்திருக்க வேண்டும். அந்த யுகத்தை…

அந்த யுகத்தைக் கடந்து வந்திருப்பவர்கள். இந்த யுகத்தில் வாழ்பவர்கள். இனி பிறக்கப் போகிறவர்கள்.

இப்படி எல்லோரும் அறிந்து வைத்திருக்க வேண்டும்.

அதுதான் இத்தொடரின் நோக்கம் – போர்க்களத்தின் நோக்கம்.

இது புலிகளுக்குச் சாதகமானதுமல்ல. இராணுவத்துக்குச் சாதகமானதுமல்ல.

புலிகளுக்கு எதிரானதுமல்ல. இராணுவத்துக்கு எதிரானதுமல்ல.

யார் வென்றார் – யார் தோற்றார் என்று சொல்வதல்ல இத்தொடரின் நோக்கம்.

போர்க்களத்தில் எது நடந்ததோ அதை அப்படியே சொல்வதும் – அதன் பயங்கரத்தை வெளிக்கொண்டு வருவதுமே இதன் நோக்கம்.

புலிகள் வென்ற சண்டைகளும் உண்டு. இராணுவம் வென்ற சண்டைகளும் உண்டு.

புலிகள் அடி வாங்கிய சண்டைகளும் உண்டு. இராணுவம் அடி வாங்கிய சண்டைகளும் உண்டு.

இறுதியில்தான் இராணுவத்துக்கு வெற்றி.

அதுவரை மாறி மாறித்தான் வெற்றி-தோல்வி.

எல்லாமே இங்கு வரும். இத்தொடரில் வரும்.

இப்போர்க்களத்தில் சண்டை மட்டுமா…???

இல்லை…!!!

சண்டை- சமாதானம் – பேச்சுவார்த்தை.

மீண்டும் சண்டை – மீண்டும் சமாதானம் – மீண்டும் பேச்சு வார்த்தை.

மூன்று தசாப்தங்களாக இப்படித்தான்.

சர்வதேச தலையீடு – இரட்டை நிலைப்பாடு – நயவஞ்சகம்.

மூட்டிவிட்டு புதினம் பார்த்த துரோகம்.

புலிகளுக்கும் உதவி – இராணுவத்துக்கும் உதவி.

எல்லாமே இங்கு வரும்.

மேலும்,இப்போர்க்களத்தில் நடந்தது இரு தரப்புச் சண்டையல்ல.

இப்போர்க்களம் புலிகளுக்கும் இராணுவத்துக்கும் மாத்திரம் உரித்தானதல்ல.

பல தரப்பினருக்குச் சொந்தமானது.

புலிகள் – இராணுவம் சண்டை.

இராணுவம் – ஏனைய குழுக்கள் [ TELO – PLOTE -EPRLF -EROS ] சண்டை

ஏனைய குழுக்கள் – புலிகள் சண்டை.

புலிகளும் ஏனைய குழுக்களும் இணைந்து இராணுவத்தோடு சண்டை.

இந்திய இராணுவம் – புலிகள் சண்டை.

புலிகள் – தமிழ் தேசிய இராணுவம் [ TNA அல்லது CVF ] சண்டை.

என்ன…தலை சுற்றுகிறதா…???

குழம்ப வேண்டாம். இப்படித்தான் அந்தப் போர்க்களம்.

தெளிவாக விளக்குகிறேன்.

துல்லியமான ஆதாரங்களோடு…தெளிவான கால வரிசையோடு…

வெள்ளி விழாக் காணும் எனது 25 வருட ஊடக வாழ்வில் -பல சிரமங்களுக்கு மத்தியில் – அன்று முதல் இன்றுவரை -திரட்டி வைத்துள்ள – கவனமாகக் களஞ்சியப்படுத்தியுள்ள தகவல்கள் இவை.

எல்லாம் துல்லியமான தகவல்கள்.

இனி இவையெல்லாம் உங்களுக்காக….

எழுத்து – வீடியோ வடிவில். த்ரிலிங்க் காட்சிகளுடன் விரைவில்…!!!

[ ஊடகவியலாளர்- எம்.ஐ.முபாறக் ]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *