உலகம்

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கைது – இது உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை; மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கண்டனம்

தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இன்று பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

பொருத்தமற்ற வழக்குகளை பதிவு செய்து; அவசர அவசரமாக அவரை கைது செய்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என மனிதநேய ஜனநாயகக்கட்சிதலைவர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அவர்கள், மதியம் 12 மணி வரை இது குறித்து முக்கிய நடவடிக்கைகள் எதுவும் எடுக்க வேண்டாம் என காவல்துறைக்கு அறிவுறுத்தி இருந்த நிலையில்; அவர் 11 மணிக்கு கைது செய்யப்பட்டு தஞ்சை கொண்டு செல்லப்படுகிறார்.

அவர் தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் யாருடைய பெயரையும் நேரடியாக குறிப்பிட்டு பேசாத நிலையில்; பொருத்தமற்ற வழக்குகளை பதிவு செய்து அவரை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

காவிரி விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் உறுதியாக செயலாற்றுவோம் என அவர் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கூறியிருந்த நிலையில்; நாளை சட்டப்பேரவை கூடவிருக்கும் சூழலில்; அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பது இந்த அரசின் உள்நோக்கத்தை வெளிக்காட்டுவதாகவே இருக்கிறது.

அவரது பேச்சு மறைமுகமாக தங்களை தாக்குவதாக கருதினால்; அதை மறுப்பதற்கும், கண்டிப்பதற்கும், விமர்சிப்பதற்கும் சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிமை உண்டு.

ஆனால் பொருத்தமற்ற வழக்குகளை பதிவு செய்து; அவசர அவசரமாக அவரை கைது செய்திருப்பதை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

இந்த வேகத்தை ஆளுங்கட்சியினரின் மீது பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களும் கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்களின் மீது ஏன் இந்த அரசு காட்டவில்லை?

தமிழ்நாடு அரசு இவ்விஷயத்தில் வரம்பு மீறியிறுக்கிறது என்பதில் ஐயமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *