உலகம்

உலகத் தமிழர் கலை பண்பாட்டுக் கூடத்தின் சர்வதேச தலைவர் மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு

உலகத் தமிழர் கலை பண்பாட்டுக் கூடத்தின் சர்வதேச தலைவர் டாக்டர் எஸ் எம் ரஷ்மி ரூமி அவர்கள் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் மாண்புமிகு ஜே சி டி பிரபாகர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து நமது அமைப்பு உலகம் முழுவதும் கலைகளை வளர்க்கும் பணிகளைப் பற்றி விளக்கிய தருணம்

இந்த சந்திப்பில் நமது அமைப்பின் பொதுச் செயலாளர் DR.அலெக்ஸ்ராஜ் இணை பொதுச் செயலாளர் டாக்டர் மீரான் ஜி பொருளாளர் பாண்டியன் மற்றும் அமைப்பின் தமிழ்நாடு கௌரவ ஆலோசகர் திருமதி திவ்யஸ்ரீ மற்றும் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

இதே வேளை மேற்படி எமது அமைப்பின் பண்ணிகளை இலங்கையில் முன்னெடுத்து செல்வதற்கு உலகக் கலை தமிழ் பண்பாட்டு அமைப்பின் இலங்கை ஆலோசனை சபைத் தலைவர் புரவலர் ஹாசிம் உமர் அவர்களுடைய வழிகாட்டுதலில் எதிர்வரும் காலங்களில் நுவரேலியாவில் அமைப்பு பிரதிநிதிகள் உடனான ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்வது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக அமைப்பின் இலங்கைக்கான பிரதி தலைவர் தொழிலதிபர் ரிசான் ஷேக் அமானி குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *