அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கிண்ணியா கிளையின் புதிய நிர்வாக சபைத் தெரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை கிண்ணியா கிளையின் புதிய நிர்வாக சபைத் தெரிவு குட்டித்தீவு உலமா சபை அலுவலகத்தில் (2) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் துணைச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.லரீபின் வழிகாட்டலில் கீழ் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் அஷ்ஷெய்க் றிபா ஹசன் மதனி தலைமையில் நடைபெற்றது.
எஸ்.எம்.முஜீர் தலைவராகவும், எம்.ஏ.அஸ்ரத் செயலாளராகவும், எம்.ஐ.முஜிபுல்லா பொருளாளராகவும், ஏ.டபிள்யூ.எம்.ஆரிப், ஏ.எல்.ஹமீட் இரு உப தலைவர்களாகவும், சி.பி.பாஹிர் ஹுசைன் உப செயலாளராகவும் மற்றும் இருபத்திரண்டு நிர்வாக சபை உறுப்பினரகளும் தெரிவு செய்யப்பட்டனர்.


(எம்.ஏ.முகமட்)
