களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு
களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் பேருவளை மருதானை யாஸிர் அரபாத் மாவத்தையில் உள்ள முஸம்மில் ஹாஜியாரின் இடத்தில் நடைபெற்றது.
மேற்படி சம்மேளனத்தின் புதிய தலைவராக பாணந்துறை பிரதேச சபை உறுப்பினர் அல்ஹாஜ் தாஹிர் பாஸி தெரிவானார். செயலாளராக ஓய்வுபெற்ற அதிபர் பீ.எம்.எம். ஜாபிரும் பொருளாளராக அல்ஹாஜ் அர்ஷத் ஸவாஹிரும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மூன்று உப தலைவர்களும், உப செயலாளர், உப பொருளாளர், மற்றும் கல்வி, விளையாட்டு, சமூக சேவை, ஊடகத்துறை, சமூக நல்லிணக்கம், சமய துறைகளுக்கும் பணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை பற்றி இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதோடு, மேல் மாகாண ஆளுனர் ஹனீப் யூஸுபை சந்தித்து ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் கலந்துறையாடவும் முடிவு செய்யப்பட்டது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் இம்தியாஸ் பாக்கிர் மாகார், ஊடகவியலாளர் அல்ஹாஜ் யாஸிர் லஹீர் உட்பட சம்மேளன அங்கத்தவர்கள் பலரும் இக் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.




பேருவளை பீ.எம். முக்தார்
