உள்நாடு

கந்தப்பளை மஸ்ஜிதுல் பலாஹ் பள்ளி ஆகஸ்ட் 7 இல் திறந்து வைப்பு

நுவரெலியா மாவட்டத்திலுள்ள கந்தப்பளை தேயிலை மலை மஸ்ஜித் பலாஹ் பள்ளிவாசளின் நிர்மாணப் பணிகள் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தர்கா நகர் நஜீப் ஹாஜியார் கல்வி நிலைய ஸ்தாபகரும் பிரபல சமூக சேவையாளருமான கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிமின் பங்களிப்போடு மேற்படி பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளிவாசளின் திறப்பு விழா 2026 ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை (07.08.2026) காலை இடம்பெறும். கலாநிதி நஜீப் ஹாஜியார் பின் அமீர் ஆலிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்பள்ளிவாசளை திறந்து வைக்கவுள்ளார்.

பேருவளை – பீ.எம். முக்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *