நாளை முதல் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்!
நாளை (19) முதல் அடுத்த சில நாட்களுக்குத் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில இடங்களில் சுமார் 75 மி.மீ வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஊவா மாகாணம் மற்றும் முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படும் தற்காலிகமான உள்ளூர் பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கப் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
