உள்நாடு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட காரியாலயத்திற்கு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் சிறப்பான வரவேற்பு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட காரியாலயத்திற்கு
தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ. எம். ஷாஜஹான் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட காரியாலயத்திற்கு தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஷாஜஹான் 17.09.2026 விஜயம் செய்தார். இவ்விஜயத்தின் போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர், கட்சியின் பொருளாளரும் கல்முனை முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பிரதி செயலாளர் மன்சூர் ஏ. காதர், வெளிநாட்டு விவகாரப் பணிப்பாளரும் கல்முனை முன்னாள் முதல்வருமான சிராஷ் மீரா சாஹிப், அம்பாறை மாவட்டச் செயலாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.சி. சமால்தீன், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும், தமிழ்நாட்டிலிருந்து அமைச்சர் ஏ. எம்.ஷாஜஹானுடன் வருகை தந்த தூதுக்குழுவினர்கள்
திருச்சி எம்ஐஇடி கல்லூரி நிறுவனங்கள் துணைத் தலைவர் முனைவர் எம். ஓய். அப்துல் ஜலீல், திருச்சி எம்ஐஇடி பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். நவீன் சேட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் ஜமால் முஹம்மது இப்ராஹிம், மூத்த ஊடகவியலாளர் திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது, மாநில எம். எஸ். எப். செயலாளர் ஷஃபீக் அஹமது, தென்காசி மாவட்ட செயலாளர் சையது பட்டாணி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்போது, இலங்கை மற்றும் தமிழ்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகங்களின் நலன், சமூக மற்றும் கல்வி முன்னேற்றம், பரஸ்பர நல்லுறவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
இவ்விஜயம் இரு தரப்பினருக்கும் இடையிலான சமூக மற்றும் நல்லுறவுப் பாலத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *