சர்வதேச அபாகஸ் மனக்கணிதப் போட்டியில் உலக சம்பியன் பட்டம் வென்றார் அல் – மதீனா மாணவி எம்.சும்ரி பாத்திமா சுதா
மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச அபாகஸ் மனக்கணிதப் போட்டியில் iCAM Abacus (ABACUS L1B) உலக சம்பியன் பட்டம் வென்று, இலங்கைக்குப் பெருமை சேர்த்தார் மதவாச்சி மாணவி செல்வி எம்.சும்ரி பாத்திமா சுதா
மதவாச்சி அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் 7ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மாணவி, சர்வதேச அளவில் 13 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,500 போட்டியாளர்களைப் பின்தள்ளி, தான் பங்கேற்ற இரண்டு போட்டிகளிலுமே முதலிடம் பிடித்து உலக சம்பியனாக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
இந்த அசாத்திய வெற்றியைத் தொடர்ந்து, தாயகம் திரும்பிய மாணவி பாத்திமா சுதாவை கௌரவிக்கும் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்வு நேற்று (11) மதவாச்சியில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
மெதவச்சி அல்-மதீனா உயர்தரப் பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னின்று இதனை நடத்தினர். பாடசாலை மாணவ, மாணவிகள், பெற்றோர், பாடசாலை நலன்புரிச் சங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர்.
முஹம்மது சும்ரி, பாத்திமா ஸிதாரா தம்பதிகளின் புதல்வியான இச் சாதனை மாணவிக்கு மதவாச்சி ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து உற்சாக வரவேற்பு அளித்துக் கௌரவித்தனர்.
