உழ்ஹிய்யாவுக்கு விஷேட சுற்றறிக்கை வெளியிட்டுள்ளமைக்கு சிறீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசுக்கு பாராட்டு
இந்த வருட உழ்ஹிய்யாவிற்கு
எந்தவித அச்சுறுத்தலுமில்லை என பொது நிருவாக அமைச்சு விசேட சுற்றிக்கை வெளியிட்டமை மூலம் ஜபாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கம் இனவாதமற்ற நல்லரசா கம் என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது பற்றி ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கட்சி கௌரவ ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,
இந்த வருடத்திற்கான வெசாக் வாரம் எதிர்வரும் 27ஆம் திகதி முதல் ஜூன் 2ஆம் திகதி வரை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இறைச்சி அறுப்பு மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு மே 30, 31 மற்றும் ஜுன் 1 ஆகிய திகதிகதிகளில் மாத்தரமே தடை விதிக்கப்பட்டுள்ளது என
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டாரவினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. .
நாட்டிலுள்ள ஒன்பது மாகணங்களினதும் பிரதம செயலாளர்களுக்கும் இந்த சுற்றரிக்கை அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
ஹஜ் பெருநாள் உழ்ஹிய்யா கொடுக்க முடியாமல் தடுப்பதன் மூலம் நாட்டில் இனவாதத்தை உருவாக்க முயன்ற உதய கம்மன்பில போன்றோரின் முகத்தில் அடி விழுந்துள்ளது.
மிகவும் உணர்வுபூர்வமான இந்த விடயத்தை அரசாங்கம் மிகச்சரியாக கையாண்டு முஸ்லிம்களும் சிங்கள மக்களும் திருப்தியுறும் வகையில் தனது தீர்வை தந்துள்ளது.
இனியாவது எதிர்க்கட்சிகள் இப்படியான சூழலில் அவசரப்பட்டு பேசி சும்மா கிடக்கும் குட்டையை கிளப்பி நாட்டை நாசமாக்க முனைய வேண்டாம் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் கேட்டுக்கொள்கிறது.
மு. முஸ்னத்
தலைவர்
ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ்.
