கம்பஹா மாவட்டத்தில் 09 A சித்தி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா – 2026

இம்முறை வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கம்பஹா மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் ‘9 ஏ’ (9A) சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் எதிர்வரும் ஓகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டெம்பர் மாத ஆரம்பத்தில் நடத்தப்படவுள்ளது.
கஹட்டோவிட்ட முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள் (Muslim Ladies Study Circle) ஏற்பாட்டில், 14ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளதாக அதன் தலைவரும், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் பணிப்பாளருமான அல்ஹாஜ் அஹ்மத் முனவ்வர் தெரிவித்தார்.
கம்பஹா மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கல்வி கற்று, இம்முறை சாதாரண தரப் பரீட்சையில் 9A சித்தி பெற்ற மாணவர்கள், எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதிக்கு முன்னர் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
மாணவரின் பெயர், முகவரி, சுட்டிலக்கம் (Index Number), பெற்றோரின் விபரங்கள் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை உள்ளடக்கி சுயமாகத் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், பாடசாலை அதிபரால் சான்றளிக்கப்பட்ட (Attested) பரீட்சைப் பெறுபேற்றுப் பத்திரத்தின் பிரதியையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர்,
முஸ்லிம் லேடீஸ் ஸ்டடி சேர்கிள்,
கஹட்டோவிட்ட.
விண்ணப்பங்களை மேற்சொன்ன முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பி வைக்குமாறு அல்லது நேரடியாகக் கையளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
