அ.இ.ஜ.உலமா கற்பிட்டி பிராந்தியத்தின் ஏற்பாட்டில் “முன்மாதிரியான முஸ்லிம் மாணவர்கள்” செயலமர்வு
கற்பிட்டி பிராந்திய ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில்,
“முன்மாதிரியான முஸ்லிம் மாணவர்கள்”
எனும் கருப் பொருளிலான விசேட செயலமர்வு இன்று (8) கல்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பாடசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வு, பாடசாலையின் அதிபர் U.M.M. அமீர் (SLPS-1) தலைமையில் தரம் 09, 10 மற்றும் சாதாரண தர மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்த வழிகாட்டல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் கற்பிட்டி பிராந்திய ஜம்இய்யதுல் உலமாவின் கிளைச் செயலாளர் அஷ்ஷெய்க் M. மிக்தாத் (ரஹ்மானி) வளவாளர்களாக அஷ்ஷெய்க் ரமழான் மர்ஷூக் (ரஹ்மானி) மற்றும் அஷ்ஷெய்க் K.M. முக்ஸித் அஹமட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது பாடசாலையின் பிரதி அதிபர் S.F.சாஜினாஸ், உதவி அதிபர் M.K.M. ரிஷாத் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







