சாதாரண தர பெறுபேறுகள் மீள் மதிப்பீட்டுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (GCE O/L) பரீட்சை முடிவுகளின் மறுமதிப்பீட்டிற்காக இன்று (25) முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, பரீட்சை முடிவுகளில் திருப்தியற்ற மாணவர்கள் மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள், திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினூடாக குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
