33 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற ஊடகவியலாளர் ஏ.எஸ்.எம். ஜாவித்
மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட அப்துல் ஸத்தார் முஹமட் ஜாவித் தனது 33 வருட கால அரச சேவையில் இருந்து கடந்த 15 ஆம் திகதியுடன் ஓய்வு பெற்றுச் சென்றார்.
மன்னார் விடத்தல் தீவு அலிகார் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான இவர் பொதுப் பரீட்சை மூலம் சித்தியடைந்து 1992 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரச முகாமைத்துவ சேவையில் இணைந்து கொண்டார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் முதல் நியமனம் பெற்று 12 வருடங்கள் அங்கு கடமையாற்றி, 2004 ஆம் ஆண்டு மன்னாரில் இருந்து கொழும்பில் அமைந்துள்ள முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் இடமாற்றலாகி தனது கடமையை பொறுப்பேற்று திணைக்களத்தில் சமய விவகாரம் பிரிவு, நிருவாகப் பிரிவு, கணக்குப் பிரிவு போன்றவற்றிற்கு பொறுப்பாக இருந்து இறுதியாக வக்பு. பிரிவுக்கு ( இலங்கையில் உள்ள சகல பள்ளிவாசல்களின் பிரிவு) பொறுப்பாக இருந்து தனது 33 வருட கால சேவையை முடித்துக் கொண்டு ஓர் பெற்றுள்ளார்.
பல துறைகளிலும் அனுபவம் கொண்டவராகவும், சமுக சேவைளாளராகவும், அகில இலங்கை சமாதான நீதவானாகவும் காணப்படும் இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஊடக டிப்லோமா கற்கை நெறியை முடித்து ஒரு சிரேஷ்ட ஊடகவியலாளராகவும் தனது பணியை மேற் கொண்டு வருகின்றார்.
