உள்நாடு

கஹட்டோவிட்ட வை.எம்.எம்.ஏ கிளை ஏற்பாட்டில் நாளை இரத்த தான முகாம்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கங்கள் பேரவையின் (YMMA) கஹட்டோவிட்ட கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்த தான முகாம் நாளை ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தேசத்தின் இரத்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடனும், மனிதாபிமான அடிப்படையிலும் முன்னெடுக்கப்படும் இந்த முகாம், அன்றைய தினம் கஹட்டோவிட்ட அல் பத்ரியா மகா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.

“ஒரு உயிரைக் காப்பாற்றுவது முழு மனித இனத்தையும் காப்பாற்றுவதற்கு சமமாகும்.” (அல் குர்ஆன்)

இந்த உயரிய நோக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளுமாறும், அன்றைய தினம் அதிகளவில் வருகை தந்து குருதிக் கொடையளித்து ஒத்துழைப்பு வழங்குமாறும் ஏற்பாட்டுக் குழுவினர் பொதுமக்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.

(ரிஹ்மி ஹக்கீம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *