உடல் உணரும் அதிக வெப்பம் இன்று
இன்று (19) வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரமுவ, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்திலும் சில இடங்களில் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த மாவட்டங்களில் வெப்பச் சுட்டெண், அதாவது மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது ‘கவனம் செலுத்த வேண்டிய’ மட்டத்திற்கு அதிகரிக்கக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
