மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் போதை ஒழிப்பு கலந்துரையாடல்
மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கான போதைப் பொருள் தடுப்பு விசேட விழிப்பூட்டும் நிகழ்ச்சிகளை பிரதேச செயலக பிரிவு மட்டத்தில் நடத்துவதற்கான கலந்துரையாடல் ஒன்று மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் எஸ். பி. எஸ். அபயகோன் தலைமையில் நேற்று முன்தினம் தினம் ஆளுநர் காரிலயத்தில் இடம் பெற்றது.
முழுநாடும் ஒன்றாக தேசிய வேலை திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான போதை வஸ்து தடுப்பு விழிப்பூட்டும்நிகழ்ச்சிகள் மத்திய மாகணத்தில் உள்ள கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களை சேர்ந்த பிரதேச செயலக மட்டத்திலே இவ்விழிப்பூட்டும் நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளதாக இக்கலந்துரையாடல் தெரிவிக்கப்பட்டது இக்கலந்துரையாடலில் வைத்தியர்கள் ,அரச உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


(மாத்தளை எம் . சதூர்தீன்)
