Wednesday, July 15, 2026
Latest:
உள்நாடு

சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸ்அப் குழுமத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வும், ஒன்று கூடலும்

பேருவளை சீனன்கோட்டை முத்துக்கள் வட்ஸ்அப் குழுமத்தின் இரண்டாம் வருட பூர்த்தி நிகழ்வும் ஒன்று கூடலும் சீனன்கோட்டை பெரேரா வீதியில் உள்ள மர்ஹூம் எம்.எஸ்.எம் பளீல் ஹாஜியார் இல்லத்தில் நடைபெற்றது.

குழுமத்தின் தலைவர் ராமிஸ் நாசீம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் குழுமத்தின் முக்கிய உறுப்பினர் அஸாம் பளீல் பேருவளை முன்னாள் நகர பிதா மில்பர் கபூர் மற்றும் இந்திய வர்த்தக பிரமுகர் ராஜூ பாய் உட்பட முக்கியஸ்தர்கள் குழுமத்தின் அங்கத்தவர்கள் என பலரும் பங்குபற்றினர். ராமிஸ் நாஸிம்,அஸ்வர்,

பௌஸான் ஸுபைர் , முஹம்மத் மினார் ஆகியோர் சீனன் கோட்டை முத்துக்கள் வட்ஸப் குழுமத்தின் இரண்டு வருட பயணம் குறித்து விளக்கினார்கள்.

குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்படும் சமுதாயப் பணிகளுக்காக அஸாம் பளீல் வழங்கப்படும் ஒத்துழைப்புக்கும் மற்றும் அங்கத்தினர்கள் தரும் ஒத்துழைப்புக்கும் சீனங்கோட்டை முத்துக்கள் சார்பிள் இனைத்தலைவர்களான ரொசான் மற்றும் பஹாம் ஆகியோர் நன்றி கூறினர்.

(பேருவளை பி.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *