உள்நாடு

ஹேனமுல்லை ஜீனியர்ஸ் பார்க்கின் வருடாந்த பரிசளிப்பு விழா

பாணந்துறை ஹேனமுல்லையில் இயங்கி வரும் ஜீனியர்ஸ்பார்க் கல்வி நிறுவனத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா, அதன் பணிப்பாளரும் போதானாசிரியையுமான ஹிமாயா இப்ராஹிமின் தலைமையில் எகொட உயன அரபாத் முஸ்லிம் மகா வித்யாலய ஜே எஸ் ஸி கேட்பார் கூடத்தில் நடைபெற்றது.

பேருவளை நகர சபையின் தலைவர் மபாஸிம் அஸாஹிர் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த வைபவத்தில்
ஓய்வு பெற்ற அதிபர் ஏ.எஸ்.எம் ஹைதர் ஸலாம் கௌரவ அதிதியாகவும் சிரேஷ்ட ஊடகவியலாளர்களான பீ. எம். முக்தார், ஏ.எல்.எம். சத்தார் ஆகியோருடன் சிரேஷ்ட ஓய்வுபெற்ற ஆசிரியர்களான ஜனாபா ஆமீனா ஜிப்ரி, ஜனாபா எம்.எஸ்.எப் முர்ஷிதா, ஜனாபா மிஹ்ருன் நிஷா ஆகியோரும் பாடசாலை ஆசிரியர்களான ஜனாபா மிஸ்ருல் அமீனா, ஜனாபா ரிபானா, ஜனாபா ரினோஸா, ஜனாபா முயீனா ,நகர பிதாவின் இணைப்பாளர் முஹம்மட் பைஸர் ஆகியோர் சிறப்பதிகளாகவும் கலந்து கொண்டனர்.

ஜீனியர்ஸ்பார்க் கல்வி நிறுவனத்தில் கற்கும் 2025/ 2026 ஆம் ஆண்டுகளில் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் கௌரவ விருதுகளும் அதிதிகளால் கையளிக்கப்பட்டன.

பல கட்டங்களாக வழங்கப்பட்ட பரிசளிப்பு நிகழ்வுகளுக்கு மத்தியில் மாணவ மணிகளின் பலதரப்பட்ட அறிவியல், கலை கலாசார நிகழ்ச்சிகளும் சபையில் கலை கட்டவே செய்தன.

பிரதம அதிதி நகர பிதா மபாஸிம் அஸாஹிர் மற்றும் அதிதி ஹைதர் ஸலாம் ஆகியோரின் உரைகளிலும் கல்வியோடு ஒழுக்க விழுமியங்களோடு கூடிய கல்வியே இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத் தேவை என்பது வலியுறுத்தப்பட்டன. அத்துடன் அரசாங்க பாடசாலைகளோடு ஜீனியர்ஸ்பார்க் போன்ற தனியார் கல்வி நிறுவனங்களும் ஒழுக்கக் கல்விக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் சிறந்ததொரு நாட்டைக் காண முடியும். மேலும் இத்தகைய பரிசளிப்பு விழாக்களாலும் அடுத்து வரும் மாணவ சந்ததிகளுக்கு உந்து சக்தியாக அமைவதும் உறுதி என்று தம் கருத்துக்களை வெளியிட்டனர்.

இந்நிகழ்வில் ஜீனியர்ஸ்பார்க் கல்வி நிறுவனத்தால் பிரதம அதிதிக்கு கௌரவ நினைவுச் சின்னம் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(பீ. எம். முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *