தேசிய மட்ட இரண்டாம் மொழி சிங்கள தினப் போட்டியில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரி மாணவர்கள் சாதனை
இரண்டாம் மொழி சிங்கள தினப் போட்டி 2026 ல் தேசிய மட்டத்தில் அனுராதபுரம் சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி பல பதக்கங்களையும் திறமைச் சான்றிதழ்களையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இதன் படி மூன்று தங்கப் பதக்கங்களை .
என்.நஹ்ஷா தரம் 07 , எம்.எஸ்.சஹஸ்பா தரம் 08, ஜீ.ஜனிஷ்கா தரம் 09 ஆகியோர் பெற்றுள்ளனர்.
வெள்ளிப் பதக்கத்தை ஆர்.சிம்லா தரம் 09 , பெற்றுக் கொண்டுள்ளார்.
இரண்டு வெண்கலப் பதக்கங்களை , ஏ.ரீ.ஷர்மின் தரம் 06 , ஜே.ஷஹீமா தரம் 08 ஆகியோர் பெற்றுள்ளனர்.
மேலும் ஐந்து திறமைச்சான்றிதழ்களை ஆர்.சாரா தரம் 06, எம்.எச்.ஹம்தா தரம் 08, எம்.இஷட் . சஹ்ரீன் தரம் 08, ஏ.நதா தரம் 09, என்.இல்மா தரம் 09 ஆகியோர் பெற்றுள்ளனர்.
அத்துடன் தேசிய மட்டப் பங்கேற்புச் சான்றிதழ்களை ஏ.எம். மூமினா தரம் 06, ஏ.ஏ.சஹீமா தரம் 07 ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு தேசிய மட்டத்தில் சிறப்பான சாதனைகளைப் படைத்து கல்லூரிக்கு பெருமை சைர்த்த மாணவிகளுக்கு அதிபர் ஜே.ஏ.மொஹமட் ஆசாத் உள்ளிட்ட ஆசிரியர் குழாமினர் , பாடசாலை நிர்வாகம் மற்றும் பெற்றோர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன் அவர்களை வழிநடத்திய ஆசிரியர் குழாமினர்க்கு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.






(எம்.ரீ.ஆரிப் அநுராதபுரம்)
