உள்நாடு

ஹிஜிராபுர முஸ்லிம் ம. வி. மாணவன் சயீட் தேசிய ரீதியில் முதலிடம்

கல்வி அமைச்சினால் நடாத்தப்பட்ட 2026 இஸ்லாமிய கலாசார போட்டியில் பிரிவு2 அரபு எழுத்தனி போட்டியில் தெ/ ஹிஜிராபுர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 9 இல் கல்வி கற்கும் மாணவன் எ.எஸ்.எம். சயீட் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை தனதாக்கிக் கொண்டார்.

வலயம் மட்டம், மாகாணம் மட்டம் ஆகியவற்றில் முதலாமிடம் பெற்ற இவர் தேசிய மட்டத்திலும் முதலாம் இடம் பெற்று பாடசாலை க்கு பெருமை சேர்த்த எ.எஸ்.எம்.சயீட்டுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்து வருகின்றது.

அத்துடன் இம்மாணவனை பயிற்றுவித்தது எ. ஆர். மூஸா கலீம் (நளீமி) ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(மாத்தளை எம். சதூர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *