ராஜாங்கனை சத்தாரதன தேரர் கைது
ராஜாங்கனை சத்தாரதன தேரரும், மற்றுமொரு நபரும் அனுராதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ருவன்வெலிசேய வளாகத்திற்கு அருகில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சத்தாரதன என்பவர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாதது ஏன் என்பது குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு அனுராதபுரம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு அனுராதபுரம் பிரதான நீதவான் நேற்று உத்தரவிட்டிருந்தார்.
