Wednesday, November 18, 2026
Latest:
உள்நாடு

மேல் மாகாண வாகன வருமானஅனுமதிப்பத்திர விநியோகம்தற்காலிகமாக இடைநிறுத்தம்; அபராதம் இன்றி புதுப்பிக்க விசேட சலுகைக் காலம்

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் கணனி கட்டமைப்பில் (eRL 1.0) மேற்கொள்ளப்படவுள்ள அவசர மேம்படுத்தல் காரணமாக, அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண பிரதான செயலாளர் அலுவலகம் மற்றும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் ஆகியன அறிவித்துள்ளன.

‘GovTech Sri Lanka’ நிறுவனத்தினால் eRL 01 கணனி கட்டமைப்பானது ‘Lanka Government Cloud 2’ இலிருந்து ‘Lanka Government Cloud 2+’ சேவைக்கு தரம் உயர்த்தப்படவுள்ளது.

இதன் காரணமாக, நாளை (19) முதல் நவம்பர் 23 ஆம் திகதி வரை மேல் மாகாணத்திற்குள் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளன.

motortraffic.wp.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலமான ஒன்லைன் சேவைகள் இன்று நள்ளிரவு (19) முதல் நவம்பர் 23 ஆம் திகதி நள்ளிரவு வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படும்.

மேற்கூறிய இடைநிறுத்தப்பட்ட காலப் பகுதியில் வருமான அனுமதிப்பத்திரங்களை பெற வேண்டியுள்ள அனைத்து வாகனங்களுக்கும், எவ்வித அபராதக் கட்டணமும் இன்றி நவம்பர் 25 – 27 வரை மீண்டும் அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் இந்த அசௌகரியத்தைத் தவிர்த்துக்கொள்ளும் வகையில் குறித்த திகதிகளைக் கவனத்திற்க கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *