தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில்சிறப்பாக நடைபெற்ற மாணவர் உலமாக்கள் கௌரவிப்பு நிகழ்வு
தர்கா நகர் இஸ்லாமிய நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் தர்கா நகர், மற்றும் வெலிப்பன்னை, வியங்கல்லை, Bபலாந்தை, துந்துவை, பலப்பிட்டிய, Bபனா பிட்டிய ஆகிய ஊர்களில் உள்ள முஸ்லிம் பாடசாலைகளில் 2026 இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் நூற்றுக்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கும் வைபவமும் தர்கா நகர் பகுதியில் இஸ்லாமிய மார்க்க தஃவா பிரச்சாரப் பணியில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் உலமாப் பெருமக்கள், பெண் வைத்தியர் மற்றும் பெண் சட்டத்தரணி, ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சங்கத்தின் தலைவர் தேசபந்து அல்ஹாஜ் ஏ,பீ,எம், ஸூஹைர் ஜே.பி. தலைமையில் தர்கா நகர் அல்ஹம்ரா மஹா வித்தியாலயத்தின் பிரார்த்தனை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வுக்கு பேருவளை ஜாமியா நளீமியா கலாபீடத்தின் முதல்வர் உஸ்தாத் அஷ்ஷேக் அகார் முஹம்மத் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
கௌரவ அதிதிகளாக முஸ்லிம் சேவை நிகழ்ச்சி தயாரிப்பாளர் அஷ்ஷேக் ஸி. எம். எம். ஸூபைர், வக்பு சபை செயலாளர் அஷ்ஷேக் எம், ஐ, எம், முனீர் (நளீமி), முஸ்லிம் சமய கலாச்சார திணைக்கள கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷேக் முப்தி முர்ஸி (நளீமி), முன்னாள் அதிபர் எம், இஸட், எம், நயீம், முன்னாள் இலங்கை வங்கி முகாமையாளர் கவிஞர் டி ,எம், ஸபா , அல்ஹம்ரா அதிபர் பஸ்லியா பாஸி, சட்டத்தரணி அஸ்மா பைஸர், வைத்தியர் Fபஸ்ஹா ஜிப்ரி, ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அம்ஜத் ஹாஜியார், முன்னாள் மருந்தகக் கூட்டத் தாபன தலைவர் கலாநிதி ரூமி ஹாஜியார், பேருவலை நகரபிதா மஃபாஸிம் அஸாஹிர், இலங்கை வக்பு சபை உறுப்பினர் அல்ஹாஜ் அரூஸ் அஸாத், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹஸீப் மரிக்கார், சமூக சேவையாளர் ஜெஸூக் அஹமத், சிரேஷ்ட ஊடகவியலாளர் அல்ஹாஜ் பீ.எம். முக்தார், ஸாஹிரா ஆரம்ப பாடசாலை அதிபர் முகம்மத் ஸக்வான்,பேருவளை பாஸியதுன் நஸ்ரியா மகா வித்தியாலய அதிபர் மஸ்னவியா மூஸீன் சங்கத்தின் உப தலைவர் அல்ஹாஜ் ராஸிக் ஜே.பி, செயலாளர் இப்ராஹிம் இம்ரான் உப செயலாளர் பாஸி ஸூபைர், உட்பட உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள், என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
தர்கா நகர் இஸ்லாமிய நலன்புரிச் சங்கத்தின் கல்வி சமய மற்றும் சமூகப் பணிகளையும் அதன் தலைவர் தேசமான்ய ஏ.பீ.எம். ஸூஹைர் ஹாஜியாரின் தியாகம்மிகு நற்பணிகளையும் இங்கு உரை யாற்றிய பிரமுகர்கள் பெரிதும் பாராட்டிப் பேசினர்.
கௌரவிக்கப்பட்ட பிரமுகர்களின் விபரம் வருமாறு.
சட்டத்தரணி அஸ்மா பைஸர் – தர்கா நகர், வைத்தியர் Fபஸ்ஹா ஜிப்ரி, – தர்கா நகர்.
அல் ஹாஜ் மௌலவி ஷெய்க் எம்.ஆர்.எம். சில்மி (நூரி) ஓய்வுபெற்ற உப தலைவர், ஆசிரியர் கல்விக் கல்லூரி, தர்கா நகர்.
மௌலவி அஷ்ஷெய்க் அல் காரி எம்.எஸ்.எம் ரஸீன் (கஃபூரி)மற்றும் ஜமாலி.
மௌலவி ஷெய்க் எம்.எச்.எம். பர்ஹான் (நளீமி) பிரதி அதிபர், முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை, தர்கா நகர்.
அல் ஹாஜ் மௌலவி ஷெய்க் எம்.இஸட்.எம் மஸீர் (அப்பாஸி) பிரதம இமாம், தாருல் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாசல், தர்கா நகர்.
அல் ஹாஜ் மௌலவி ஷெய்க் எம்.பீ.எம். நிப்ராஸ் முஃப்தி (ரஷாதி) அதிபர், முஅய்யிதுல் இஸ்லாமிய அரபுக் கல்லூரி, தர்கா நகர்.
மௌலவி ஷெய்க் செய்யது ஜவ்ஃபர் மௌலானா (மக்கி) பிரதம இமாம், ஹில்ரியா ஜும்ஆப் பள்ளிவாசல், பேருவளை.
அல் ஹாஜ் மௌலவி அல் ஹாஃபிழ் ஷெய்க் எம்.ஐ.எம் ரிஸ்வி (உஸ்வி) பிரதம இமாம், ஷெய்க் மாதார் ஜும்ஆப் பள்ளிவாசல், வெலிப்பிட்டிய, தர்கா நகர்.
மௌலவி அஷ்ஷெய்க் அல் ஹாஃபிழ் நுஸ்ரத் அலி (பாரி) விரிவுரையாளர், நபவிய்யா அரபுக் கல்லூரி, எலுவில, பாணந்துறை.
மௌலவி ஷெய்க் அல் ஹாஃபிழ் ஏ.எப்.எம் யாசர் (ஹஸனி) பிரதம இமாம், முஹியித்தீன் கிராண்ட் பள்ளிவாசல், தர்கா நகர்.
மௌலவி ஷெய்க் ஏ.என். அர்ஷத் நுஹ்மான் (அப்பாஸி) அதிபர், அல் ஹதஃப் குர்ஆன் மத்ரஸா, தர்கா நகர்.










(பேருவளை பீ.எம். முக்தார்)
