உள்நாடு

கொழும்பில், பல் மருத்துவ மற்றும் மன நல உளவியல் நூல் வெளியீடு

பல் மருத்துவரும், குடும்ப உளநல ஆலோசகருமான
டாக்டர் அத்ஹரா முஹம்மது முஸ்தபா சாதிக் எழுதிய
“பற் சுகாதாரம் பேணுவோம்; மனநலம் காப்போம்”என்ற
நூலின் வெளியீட்டு விழா,
இல. 61, முவர் வீதி, மரைன் டிரைவ் கொழும்பு -6 இல் உள்ள
மிராஜ் ஹோட்டலில் எதிர்வரும் 21 ஆம் திகதி
சனிக்கிழமை மாலை
4.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில்
முன்னாள் அமைச்சரும்,சிங்கப்பூருக்கான இலங்கையின் முன்னாள் உயர் ஸ்தானிகருமான திருமதி பேரியல் இஸ்மாயில் அஷ்ரப் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.

மன்னார், எருக்கலம்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட டாக்டர் அத்ஹரா முஹம்மது முஸ்தபா சாதிக், பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீட பட்டதாரியும் அத் துறையில் அதிக அனுபவத்தைக் கொண்டவருமாவார் . அவர் சிறந்த குடும்ப நல உளவியல் ஆலோசகராகவும் விளங்குவதோடு, பத்திரிகைககளில் நீண்ட காலமாக கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வளவாளராக பங்களிப்புச் செய்கின்றார்.

பல் மருத்துவத்திலும்,குடும்ப நல உளவியலிலும் அவரது அனுபவப் பகிர்வாக இந் நூல் அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *