உள்நாடு

புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம்ஆசிரியர் வான்மை விருத்திகல்விசார் களப்பயணம்

புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் வான்மை விருத்தி வேலைத்திட்டத்திற்கு இணங்க, ஆசிரியர்களின் திறன்களை மேம்படுத்தவும், ஏனைய பாடசாலைகளின் சிறந்த நடைமுறைகளை நேரில் கண்டு அனுபவங்களைப் பெறவும் ஒரு நாள் கல்விசார் களப்பயணம் மிகச் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

கல்லூரியின் அதிபர்
ஏ.எல்.சரீனா பர்வீன் தலைமையில், 66 பணிக்குழுவினர் கலந்துகொண்ட இக்களப்பயண தரிசிப்பு மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி காலைக் கூட்டத்துடன் ஆரம்பமாகியது.

நிர்வாகக் குழுவினரின் அன்பான வரவேற்பு, காலை உணவு உபசரிப்புடன் சிறப்புக் கலந்துரையாடல் இடம்பெற்றது.

108 வருட வரலாற்றை கொண்ட மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) நிர்வாகம் மற்றும் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதை ஆசிரியர்கள் வியப்புடன் அவதானித்தனர்.

அக்கல்லூரியின் அடையாளப்படுத்தப்பட்ட 10 சிறந்த நடைமுறைகளும் குழுக்களாக பிரிக்கப்பட்டு பொறுப்பாளர் ஒருவரின் வழிகாட்டலில் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்தமை பயணத்தின் வினைத்தறனை மேலும் வலுவூட்டியிருந்தது.

தொடர்ந்து மாவனல்லை ஸாஹிறா தேசியக் கல்லூரி விஜயத்தின் போது,
புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த அதிபர் ஏ.எம்.அனீஸ் உள்ளிட்ட நிருவாக்குழு அன்புடன் வரவேற்றதுடன், பாடசாலையின் நிர்வாக முறைகள் பார்வையிடப்பட்டன.

மேலும் ஆயிஷா சித்தீக்கா பெண்கள் கல்லூரியின் சிறந்த நிர்வாக நடைமுறைகள் மற்றும் கல்விச் செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதோடு தப்சீர் முகாம் என்ற ஆன்மீக அமர்வும் இடம் பெற்றது ஆசிரியர்களை மிகவும் கவர்ந்தது.

பேராதனை தாவரவியல் பூங்காவில் ஆசிரியர்களுக்கான புத்துணர்ச்சியூட்டும் விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் வான்மை விருத்திச் செயற்பாடுகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றன.

புதிய விடயங்களை நடைமுறைப் பூர்வமாகக் கற்கும் இத்தகைய அனுபவங்கள் ஆசிரியர்களுக்குப் புதிய பரிமாணத்தை வழங்கியுள்ளன.

இக்களப்பயணம் வெற்றிகரமாக நடைபெற அனுமதி வழங்கிய வலய மற்றும் மாகாணக் கல்விப் பணிமனைகளுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் அதிபர் ஏ.எல்.சரீனா பர்வீன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

(எம்.யூ.எம்.சனூன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *