உள்நாடு

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பைக்கும், வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளருக்கும் இடையில் சந்திப்பு

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.டபிள்யு.டபிள்யு.எம்.பி.எஸ்.சி.பாலமகும்புரவை 03.11.2026ல் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது அம்பாறை மாவட்டத்தில் கடந்த அரசாங்க காலத்தில் பிரதேச செயலாளருக்கு அறிவிக்காமல் பொத்துவில் பிரதேசத்தில் விவசாயிகளின் ஆயிரக்கணக்கான காணிகளை வனப்பாதுகாப்பு திணைக்களம் சுவீகரித்தமை தொடர்பில் அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பான விஷேட கூட்டம் ஒன்றை நடாத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தாங்கள் பிரதேச செயலாளர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் மாவட்ட காணிக் குழுவின் அங்கீகாரம் இல்லாமல் வர்த்தமானி வெளியிடுவதில்லை எனவும் குறிப்பிட்ட வர்த்தமானி தொடர்பான விவரங்களை வனப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக பணிப்பாளர் நாயகம் திரு.பாலமகும்புர பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையிடம் தெரிவித்தார்.

விஷேட வர்த்தமானி ஊடாக சுவீகரிக்கப்பட்ட இக்காணிகளை விடுவிப்பதற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், வனப்பாதுகாப்பு திணைக்களம், அம்பாறை மாவட்ட காணிக் குழுவும் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு வரும் இவ்வேளையில் பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவில் செங்காமம் பிரதேசத்தில் அமைந்துள்ள விவசாயிகளுக்குச் சொந்தமான 742 ஹெக்டேயர் காணிகளை புதிய வர்த்தமானி மூலம் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தால் தன்வசப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறித்து பொத்துவில் விவசாயிகள் தங்களின் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *